Home இலங்கை அரசியல் செம்மணி போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் : சி.வி.கே அதிரடி அறிவிப்பு

செம்மணி போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் : சி.வி.கே அதிரடி அறிவிப்பு

0

யாழ்ப்பாணம் – செம்மணி போராட்ட களத்திலே குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam) கருத்து வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (26) நடத்திய ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”செம்மணிப் போராட்ட களத்தில் எந்தவொரு மக்களும் எங்களை அகற்றவில்லை, வர வேண்டாம் என்று சொல்லவில்லை, பங்குபற்ற வேண்டாம் என்று சொல்லவில்லை.

கிளிநொச்சியில் (Kilinochchi) இருந்து வந்திருந்த அதிகமானோரைக் கொண்ட ஒரு குழுவினரே குழப்பம் விழைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அந்தக் குழுவிற்கும் எனக்கும், பொதுச் செயலாளருக்கும், கட்சிக்கும் முரண்பாடு உண்டு.

அதனை வைத்து செய்யப்பட்ட ஒரு அசிங்கமானே செயலே இது. கட்சி சார்பில் இதனைக் கண்டிக்கின்றேன்.

இது போன்ற சம்பவங்களில் நீதி செய்ய வேண்டிய பொறுப்பை மக்களிடம் கையளிக்க நான் விரும்புகின்றேன்.

இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தியதன் பின்னணியில் ஏதெவொரு திட்டம் இருக்கின்றது என்பது புலனாகின்றது” என தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/8KIbZHipoZI

NO COMMENTS

Exit mobile version