Home இலங்கை சமூகம் 20 சர்ச்சைக்குரிய சம்பவங்கள் குறித்து விரைவில் குற்றப்பத்திரிகை!

20 சர்ச்சைக்குரிய சம்பவங்கள் குறித்து விரைவில் குற்றப்பத்திரிகை!

0

அண்மைய காலங்களில் நடந்த 20க்கும் மேற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை

குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள உள்ளவர்களில் பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றப்பத்திரிகைகளைத் தயாரிப்பதில் விசேட குழுவொன்று தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

முந்தைய அரசாங்கங்களில் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளும் குற்றப்பத்திரிகையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version