Home இலங்கை அரசியல் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

0

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானங்களுக்கு முரணாக செயற்பட்டமைக்காக நாடாளுமன்ற உறுபினர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அதன் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்க(Duminda Dissanayake) மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்,  தயாசிறி ஜயசேகர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்(slfp) ஒழுக்காற்று விசாரணைக்கும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தடையுத்தரவு

முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதை நிறுத்தி வெளியிடப்பட்டிருந்த தடையுத்தரவை இடைநிறுத்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தீர்மானித்தது.

,இதற்கமைய தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து கடிதம் ஒன்றை அனுப்ப கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு அதிகாரம் இருப்பதாகவும் அந்த உண்மையை மறைத்து அவர் தடையுத்தரவை பெற்றுக்கொண்டுள்ளதாக சுதந்திரக்கட்சியின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version