முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் (Keheliya Rambukwella) மகன் ரமித ரம்புக்வெல்லவுக்கு (Ramith Rambukwella) எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (12) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குறித்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
வழக்கு தாக்கல்
270 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை அவர் எவ்வாறு ஈட்டிக்கொண்டார் என்பதை வெளியிடத் தவறியதற்காக அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
