Home இலங்கை அரசியல் மேர்வின் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

மேர்வின் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

0

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு(Mervyn Silva )எதிராக, குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சராக இருந்த காலத்தில், 153 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான
சொத்துக்களை குவித்ததாக, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்
ஆணையகம், அவருக்கு எதிராக, இந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

குற்றச்சாட்டுகள்

சட்டவிரோதமான வழிகளில் சொத்துக்களை ஈட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள்
முன்வைக்கப்பட்டுள்ளன.

 லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் கூற்றுப்படி, கொழும்பு 7 பகுதியில் 70 மில்லியன்
ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வாங்கியது, கடவத்தையின் தலுபிட்டிய பகுதியில் 30
மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்தை கையகப்படுத்தியமை மற்றும்
அவரது மகன் மாலக சில்வாவுக்கு பல கோடி மதிப்புள்ள சொகுசு ஜீப் வாங்கியது
ஆகியவை, இந்த குற்றச்சாட்டுகளில் அடங்குகின்றன.

NO COMMENTS

Exit mobile version