Home முக்கியச் செய்திகள் கொழும்பு சென்று மீண்டும் வருவேன்: மக்கள் மத்தியில் வைத்தியர் அர்ச்சுனா உறுதி

கொழும்பு சென்று மீண்டும் வருவேன்: மக்கள் மத்தியில் வைத்தியர் அர்ச்சுனா உறுதி

0

இருநாள் விடுமுறையில் கொழும்பிற்கு சென்று மீண்டும் வருவேன் என சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா (Dr Archchuna) மக்களிடம் உறுதியளித்து சென்றுள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் (Chavakachcheri Base Hospital) நேற்று (08) இடம்பெற்ற போராட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கருத்துத் தெரிவிக்கையில், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்னை வைத்தியசாலையை விட்டு வெளியேறுமாறே கூறியுள்ளார்.

கொழும்பில் பேச்சுவார்த்தை

ஆனால் இவ் விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் பேசி முடிவெடுக்கப்படவுள்ள நிலையிலும், என்னோடு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தும் முகமாகவுமே என்னை கொழும்பிற்கு அழைத்துள்ளனர்.

நான் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராகவே கொழும்பு சென்று வரவுள்ளேன்.

ஆனால் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தானே வைத்திய அத்தியட்சகர் என தெரிவித்துள்ளார்.

அந்த முடிவை நீதிமன்றம் தான் எடுக்க வேண்டும்.

தற்போதும் சட்டப்படி நானே பதில் வைத்திய அத்தியட்சகர்.

எனவே மக்கள் பதற்றமடையவோ, குழப்பமடையவோ தேவையில்லை. மக்கள் என் மீது வைத்த அன்புக்கு நன்றி. மீண்டும் வருவேன் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/ZOExEWsP_4U

NO COMMENTS

Exit mobile version