Home இலங்கை சமூகம் வஞ்சியக் குளக்கண்டத்தில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் விசிரப்பட்ட இரசாயனம்

வஞ்சியக் குளக்கண்டத்தில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் விசிரப்பட்ட இரசாயனம்

0

நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்பிற்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் ட்ரோன் மூலம் இரசாயனம் விசுரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது, இன்று (26) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது MI 07 பயறுச் செய்கைக்கான இரசாயனம், விசுரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வலுவடைந்த இலங்கையின் பொருளாதாரம்! மத்திய வங்கி தகவல்

துண்டச் செய்கை

மஞ்சள் நோய்க்கு எதிர்ப்பு இனமான உளுந்து முன்மாதிரி துண்டச் செய்கை போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதிப் பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கமநல,விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் விவசாயிகள் கலந்து சிறப்பித்தனர்.  

வலுசக்தி துறையில் நடைமுறைப்படுத்தவுள்ள புதிய திட்டம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version