Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் யுத்த காலத்தின்போது நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

மட்டக்களப்பில் யுத்த காலத்தின்போது நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலத்தின்போது நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை ஒன்று மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தின் குருமண்வெளி துறையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையிலான பேருந்து சேவையே ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – படுவாங்கரைப் பகுதிக்கும் எழுவாங்கரைப் பகுதிக்குமான பிரதான போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றாக குருமண்வெளி – மண்டூர் படகுப் பாதை இடம்பெற்று வருகின்றது.

தமிழீழ விடுதலை புலிகளை வைத்து ஆட்சியை கைப்பற்றிய சிங்கள அரசியல்வாதிகள்

பேருந்து போக்குவரத்து சேவை

இப்படகு பாதையில் பயணம் செய்யும் பயணிகள் மட்டக்களப்புக்குச் செல்வதாயின் நிறைய சிரமத்தின் மத்தியில் அதிக செலவு செய்து தமது போக்குவரத்துக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இவ்விடயம் குறித்து அப்பகுதி மக்கள் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் (Pillayan) முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க குருமண்வெளி துறையிலிருந்து குறித்த பேருந்து சேவை மகிழூர், எருவில், கிராமங்களுடாக மட்டக்களப்பு வைத்தியசாலை வரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்து போக்குவரத்து சேவையின் ஆரம்ப நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என பலரும் இணைந்திருந்தனர்.

மே தினம், மக்கள் ஆட்சிக்காக மக்கள் அணிதிரளும் நாள்: டில்வின் சில்வா வலியுறுத்தல்

மீண்டும் ஆரம்பம்

யுத்தகாலத்தின் போது குறித்த பேருந்து சேவை இடம்பெற்று வந்தபோதிலும் பின்னர் அது நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால், அப்பகுதி மக்களும், குருமண்வெளி – மண்டூர் படகுப் பாதையைப் பயன்படுத்திவரும் பயணிகளும், விவசாயிகளும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், தற்போது இப்போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதையடுத்து அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதோடு இச்சேவையை ஏற்படுத்தியுள்ள இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சாதாரண தரப் பரீட்சை மீள் திருத்தப் பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version