மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனக் கிடங்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட
சந்தேக நபரை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தில் ஏழு நாட்கள் தடுப்பு
காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இன்று அவர் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது இந்த
அனுமதி வழங்கப்பட்டது.
இரசாயனக் கிடங்கு
விஜேவிக்ரம மனம்பேரிகே பியல் சேனாதீர, என்ற இந்த சந்தேகநபர், ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர் சம்பத் மனம்பேரியின் சகோதரர்
ஆவார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின்
விசாரணையின் போது தகவல்கள் வெளியாகின.
அதனை தொடர்ந்து, மித்தெனியவில் உள்ள
காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த 500,000 கிலோகிராம் இரசாயன பொருட்கள்
மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
