Home இலங்கை அரசியல் நாமலிடம் பதுங்கிய சாணக்கியன்! செம்மணியில் விரட்டியடிக்கப்பட்டதன் பின்னணி

நாமலிடம் பதுங்கிய சாணக்கியன்! செம்மணியில் விரட்டியடிக்கப்பட்டதன் பின்னணி

0

செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்கு வருகைத் தந்த சாணக்கியன் அடித்து விரட்டப்பட்டுள்ளார். உண்மையில் சாணக்கியன் எல்லாம் என்பது ஒரு தேசே துரோகி.  இவர்கள் போன்றவர்களால் நானும் ஒரு அரசியல்வாதி என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு வெட்கமாக உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். 

யாழ். செம்மணியில் இடம்பெற்று வரும் அணையா விளக்கு இறுதி நாள் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

  

சாணக்கியன் தேச துரோகி

மேலும் தெரிவிக்கையில்,

சாணக்கியன் உள்ளிட்டோர்  பொதுவெளியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், சூசை, பொட்டம்மான் என்று வீர வசனம் கதைத்து விட்டு அங்கு சிங்களவர்களிடம் சென்று மாற்றி மாற்றி கதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

தமிழ் அரசியல்வாதிகளை மக்கள் நம்ப வேண்டாம். அவர்கள் பலரும் தேச துரோகிகளே. சாணக்கியனின் பேச்சுக்கள் தொடர்பில் நாமல் ராஜபக்ச என்னிடம் விசாரித்திருக்கின்றார். 

இங்கு ஒன்று கதைத்துவிட்டு நாமல் ராஜபக்சவிடம் சென்று  பணிந்து பேசுவார்கள்.

டக்ளஸ் தேவானந்தாவெல்லாம் ஒரு கொலைகாரர். எனது கண்முன்னே எனது நண்பனை கொலை செய்திருக்கின்றார்கள். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வைத்து அரசியல் மட்டுமே செய்து கொண்டிருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version