செம்மணியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகள் குறித்து தாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் லமி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, செம்மணி மனித புதைகுழி குறித்து பிரிட்டன் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையின் பல பகுதிகளில் காணாமல் போனவர்களின் குடும்பத்தவர்களுடன் நாங்கள் நெருக்கிய தொடர்பில் உள்ளோம்.
தொழில்நுட்ப உதவி
அத்தோடு, அவர்களுக்காக குரல் கொடுக்க உள்ளோம்.மேலும் குறித்த நபர்களினுடைய பிரச்சினைகளை அறிவது தொடர்பில் அரசசார்பற்ற அமைப்புகள் உட்பட ஏனைய தரப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.
எங்களால் தொழில்நுட்ப உதவிகளை வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்வதற்கு நான் தயாராக உள்னேன்.மனித புதைகுழி விடயத்தில் திறன் தொடர்பான பிரச்சினைகள் உள்ளமை குறித்த புரிந்துணர்வு காணப்படுகின்றது.
இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கவில்லை. இதன் காரணமாக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான நியாயாதிக்கம் சர்வதேச நீதிமன்றத்திற்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
