Home இலங்கை அரசியல் சர்வதேசத்தில் மனித உரிமைகள் தரத்தில் இலங்கை தொடர்பி்ல் வெளியான அதிர்ச்சி தகவல்!

சர்வதேசத்தில் மனித உரிமைகள் தரத்தில் இலங்கை தொடர்பி்ல் வெளியான அதிர்ச்சி தகவல்!

0

வடக்கு, கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களில் தமிழர்களினுடைய  மனிதப் புதைகுழிகள் பரவிக் கிடப்பதாக கனேடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, குறித்த மனிதப் புதைகுழிகளை முழுமையாக அடையாளம் காண்பது தற்போது சவாலாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், மனிதப்புதைகுழிகள் சார்ந்த விவகாரத்தை கையாளுவதற்கு தாயகத்தில் ஒரு செயலணி உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், மனிதப்புதைகுழி அகழ்வு சார்ந்த விவகாரத்திற்கு புலம்பெயர்ந்த இளையோர்களும் ஒத்தாசை வழங்க வேண்டும் எனவும் நேரு குணரட்ணம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேற்குறித்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி…..

NO COMMENTS

Exit mobile version