Home இலங்கை அரசியல் தாயை சீரழித்து பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்! சபையில் உணர்ச்சிவசப்பட்ட அர்ச்சுனா

தாயை சீரழித்து பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்! சபையில் உணர்ச்சிவசப்பட்ட அர்ச்சுனா

0

ஒரு தாயை தகாதமுறைக்குட்படுத்தி கொலை செய்து ஆடையில்லாமல் செம்மணியில் புதைத்துள்ளார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(30) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

 “குறித்த தாயை கொலை செய்யும் போது அவருடைய குழந்தையை கையால் அமர்த்தி கொலை செய்துள்ளார்கள்.

கொலை செய்த குழந்தையை தாய் குற்றுயிராய் இருக்கும் போது அவள் நெஞ்சில் போட்டு புதைத்துள்ளனர்.

அகழ்ந்தெடுக்கும் பணிகளின் போது அந்த தாய் தன் குழந்தையை கட்டியணைத்தப்படி உள்ள எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.

ஐ.நா செயலாளர் வோல்கர் டர்க் தமிழ் மக்களை சந்திக்க சுடாது என்று பெரிய சதி நடந்துள்ளது” என குறிப்பிட்டார். 

NO COMMENTS

Exit mobile version