Home இலங்கை அரசியல் செம்மணி அவலத்தை புறக்கணித்த அரசாங்கம் பாலஸ்தீனத்தை ஆதரித்த அதிர்ச்சி!

செம்மணி அவலத்தை புறக்கணித்த அரசாங்கம் பாலஸ்தீனத்தை ஆதரித்த அதிர்ச்சி!

0

தற்போதைய அரசாங்கமானது, செம்மணி மனித புதைக்குழி அவலங்கள் தொடர்பான சிங்கள நூல் வெளியீட்டு நிகழ்வை புறக்கணித்தமையானது  தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல பல தசாப்தங்களுக்கு பின்னர் வடக்கு மக்களின் வலிகளை உணர்ந்த சிங்கள மக்களையும் புறந்தள்ளி வைத்துள்ளதாகவே தோன்றுகிறது என சிங்கள மற்றும் தமிழ் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

 நூல் வெளியீட்டு நிகழ்வை புறக்கணித்த அரசாங்கம், பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிரான கண்டன போராட்டத்தை ஆதரித்தமை தொடர்பிலும் அவர்கள் கேள்லி எழுப்பியுள்ளனர். 

செம்மணி மனித புதைக்குழி அவலங்கள் தொடர்பான சிங்கள நூல் வெளியீட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், அதை மறுத்த அரசாங்க தரப்பு எதற்காக எவ்வாறான உள்நோக்கத்தோடு இதை செய்தது என பல கோணங்களில் மக்களை சிந்திக்க வைத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஐ.நா மாநாடு 

மேலும் ஐ.நாவின் மனித உரிமைகள் மாநாடு நடக்கவிருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த புறக்கணிப்பை ஆழமாக நோக்க வேண்டியுள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பேஸ்லைன் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

நேற்று முன்தினமே (14)செம்மணி மனித புதைக்குழி அவலங்கள் தொடர்பான சிங்கள நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

அதற்கு அடுத்த நாளே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அந்த போராட்டத்தில் அரசாங்கத்தின் இரு அமைச்சர்கள் மற்றும் ஜே.வி.பின் இளைஞர் படையணியின் பிரதானி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தின் பின்னர முக்கியஸ்தர்களின் உரையில் அமைச்சர்கள் அனைவரும் உரையாற்றினர்.
அங்கு உரையாற்றிய பிரதி சபாநாயகர் வைத்திய கலாநிதி ரிஸ்வி சாலி,
காசாவில் பச்சிளம் குழந்தைகள் கொத்து கொத்தாக கொல்லப்படுகின்றனர் என்று ஆவேசமாக உரையாற்றினார்.

ஆனால் தமிழர்களின் குழந்தைகள் சொந்த மண்ணில் கொன்று புதைக்கப்பட்ட அவலத்தினை ஆவணமாக்கும் நிகழ்வை ஏன் ஏன் புறக்கணித்தீர்கள்” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்

NO COMMENTS

Exit mobile version