Home முக்கியச் செய்திகள் காஷ்மீர் தாக்குதல் பயங்கரவாதிகள்..! கட்டுநாயக்கவில் சென்னை விமானம் அதிரடி சோதனை

காஷ்மீர் தாக்குதல் பயங்கரவாதிகள்..! கட்டுநாயக்கவில் சென்னை விமானம் அதிரடி சோதனை

0

சென்னையில் இருந்து வந்த சிறிங்கன் எயார்லைன்ஸ் விமானம் இன்று (03) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர்கள் விமானத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இந்தியாவிலிருந்து எச்சரிக்கை வந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இதனால் இலங்கை பாதுகாப்புப் படையினர் விமானம் தரையிறங்கியவுடன் சோதனை நடத்தியுள்ளனர்.

சந்தேகநபர்கள்

அதன்படி, விமானத்தில் இருந்ததாக நம்பப்படும் ஒரு சந்தேக நபர் குறித்து சென்னை பகுதி கட்டுப்பாட்டு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் எவரும் இருக்கவில்லை என  விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வுக்குப் பிறகு விமானம் விடுவிக்கப்பட்டதாகவும் ஆனால் சிங்கப்பூருக்குச் செல்லும் அடுத்த விமானமான UL 308, பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக தாமதமாகிவிட்டதாகவும் சிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சிறிலங்கா எயார்லைன்ஸ் தனது பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், எல்லா நேரங்களிலும் மிக உயர்ந்த தரத்தைப் பேணுவதற்கு உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

🛑 you may like this…!

https://www.youtube.com/embed/mkupE8MpMRI

NO COMMENTS

Exit mobile version