இலங்கையிலிருந்து சில பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான நீண்டகால தடைகளை சீன அரசாங்கம் நீக்கியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்திருந்த சுங்கப் பொது நிர்வாக பிரதி அமைச்சர் வாங் லிங்ஜங் (Wang Lingjung) உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஏற்றுமதி
குறித்த கலந்துரையாடலில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கோழி இறைச்சி, முட்டைகள் மற்றும் அன்னாசி பழங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இலங்கையில் அன்னாசிப்பழ உற்பத்தியாளர்கள் மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் சீன சந்தைக்குக் கோழி இறைச்சி, முட்டை மற்றும் அன்னாசி பழங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.