Home இலங்கை அரசியல் கொழும்பு மாநகர முதல்வர் போட்டியில் வெற்றி யாருக்கு! சஜித் தரப்பின் இறுதி நேரக் கருத்து

கொழும்பு மாநகர முதல்வர் போட்டியில் வெற்றி யாருக்கு! சஜித் தரப்பின் இறுதி நேரக் கருத்து

0

கொழும்பு மாநகர முதல்வராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதை கணிக்க முடியாது என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றும் போது இன்று அவர் இதனை கூறியுள்ளார்.

சில உறுப்பினர்கள் கடைசி நேரத்தில் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக்கூடும் என்பதால், இந்த கணிப்பை முன்கூட்டியே கூற முடியாதுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி யாருக்கு

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் 29 உறுப்பினர்கள் நம்பகமானவர்கள், ஆனால், சுயேச்சைக் குழுக்கள் உட்பட மற்றவர்களிலேயே பிரச்சினை இருப்பதாக மரிக்கார் கூறியுள்ளார்.

சர்வஜன பலய உறுப்பினர்கள் சிலர் சில உள்ளூராட்சி அமைப்புகளில் தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்க ஒருதலைப்பட்சமாக முடிவு செய்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே நாளைய வாக்கெடுப்பின் முடிவுகளிலிருந்தே வெற்றி யாருக்கு என்பது தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.

You may like this..

NO COMMENTS

Exit mobile version