Home இலங்கை அரசியல் முடங்குமா வடக்கு – கிழக்கு..! வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தயார்

முடங்குமா வடக்கு – கிழக்கு..! வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தயார்

0

தான் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கப் போவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், தனது இருப்பை நிலைநாட்ட அவருக்கு ஒரு கதிரை தேவைப்படுவதாக ஓய்வு நிலை சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி இரேனியஸ் செல்வின் தெரிவித்துள்ளார்.

கட்சியின் முடிவுக்கு தான் கட்டுப்படுவேன் என சுமந்திரன் தெரிவித்திருந்தாலும் தமிழரசுக் கட்சியின் பொதுக் குழு சுமந்திரனையே ஆதரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, வடக்கு கிழக்கில் கதவடைப்பு போராட்டம் ஒன்றை நடத்த இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

முன்னதாக, 15ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்த இந்த கதவடைப்பு போராட்டம், பின்னர் 18ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், மடுத் திருக்கோவிலின் திருவிழா இதனால் பாதிக்கப்படலாம் என இரேனியஸ் செல்வின் கருதுகின்றார்.

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்

NO COMMENTS

Exit mobile version