Home உலகம் தண்ணீர் பீரங்கியால் பிலிப்பைன்ஸ் கப்பலை தாக்கிய சீனா!

தண்ணீர் பீரங்கியால் பிலிப்பைன்ஸ் கப்பலை தாக்கிய சீனா!

0

தென் சீனக் கடலில் சென்று கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பல் மீது சீன கடலோர காவல்படையின் தண்ணீர் பீரங்கிகள் மூலம் தண்ணீரை பீச்சியடித்து தாக்குதல் நடத்தியுள்ளது.

தென் சீனக் கடலில் உள்ள பல சிறிய தீவுகளை மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றமையினால் அடிக்கடி தென் சீனக் கடலில் மோதல் நடக்கிறது.

பிலிப்பைன்சுக்கும் சீனாவுக்கும் இடையில் தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகின்ற நிலையில் இந்த விவகாரத்தில் சீனாவுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.

லண்டனில் மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக் குத்து தாக்குதல்: சிறுவன் பலி,பலர் காயம்

தண்ணீர் பீரங்கிகள்

இந்நிலையில் தற்போது தென் சீனக் கடலில் சென்று கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பல் மீது சீன கடலோர காவல்படையின் கப்பல் தண்ணீர் பீரங்கிகள் மூலம் தண்ணீரை பீச்சியடித்து தாக்குதல் நடத்தியமையினால் தென் சீனக் கடலில் இன்று பதட்டம் ஏற்பட்டது.

இது குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “சீனாவின் கடலோரக் காவல்படை தென் சீன கடலில் சென்று கொண்டிருந்த எங்களது பிலிப்பைன்ஸ் கப்பலை இன்று காலையில் நீர் பீரங்கிகளால் எட்டு முறை சுட்டது.

இந்தியப் பெருங்கடல் – செங்கடலில் தாக்கப்பட்ட நான்கு கப்பல்கள்: அத்துமீறும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

கப்பலின் உபகரணங்கள் 

கப்பலின் உபகரணங்கள் சேதமாகி உள்ளதுடன் சீனாவின் அனுமதியின்றி இக்கடல் பகுதியில் எந்த கப்பலும் செல்ல கூடாது என சீன கடலோர காவல் படை மிரட்டி வருகிறது.

சீன கடலோரக் காவல்படையின் துன்புறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது” என அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் சுகாதார சீர்கேடுடன் இயங்கிய உணவகங்கள்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version