Home உலகம் இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை: ஆயிரக்கணக்கிலான மக்கள் வெளியேற்றம்

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை: ஆயிரக்கணக்கிலான மக்கள் வெளியேற்றம்

0

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லண்டனில் மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக் குத்து தாக்குதல்: சிறுவன் பலி,பலர் காயம்

எரிமலை வெடிப்பு

இந்த எரிமலை வெடிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக அப்பகுதியில் உள்ள  12 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் – செங்கடலில் தாக்கப்பட்ட நான்கு கப்பல்கள்: அத்துமீறும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

மக்களுக்கு எச்சரிக்கை

எரிமலையை சுற்றி 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது எனவும் எரிமலை வெடித்ததால், அருகில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை மூடவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 இதேவேளை,இந்தோனேசியாவின் ருயாங் தீவில் கடந்த 16ம் திகதி எரிமலை வெடித்து சிதறியமை குறிப்பிடத்தக்கது.

கனேடிய மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு: பணி நேரத்தில் மாற்றம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version