Home தொழில்நுட்பம் விண்ணில் ஏவப்பட்ட பாகிஸ்தானின் செயற்கைக்கோள்!

விண்ணில் ஏவப்பட்ட பாகிஸ்தானின் செயற்கைக்கோள்!

0

பாகிஸ்தான் நாட்டில் தயாரான பாகிஸ்தானுக்கு சொந்தமான எலக்ட்ரோ-ஆப்டிகல் (EO-1) என்ற செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

PRSC-EO-1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவும் மையத்தில் இருந்து செலுத்தப்பட்டு, விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இயற்கை வளங்கள்

இந்த செயற்கைக்கோள் பாகிஸ்தானின் இயற்கை வளங்களை கண்காணித்து நிர்வகிக்கும் திறனை அதிகரிக்கவும், பேரிடர்கள் குறித்து முன்னதாகவே அறிந்து கொள்வதற்கும் நகர்ப்புற திட்டமிடல் மற்றும் விவசாய மேம்பாட்டை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும்.

NO COMMENTS

Exit mobile version