Courtesy: யூசுப்
தமிழர் பிரதேசங்களில், அரச வைத்தியசாலைகள் மற்றும் வைத்தியர்கள் பற்றிய பல்வேறு காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இவற்றில் சில காணொளிகள் உண்மையான பிரச்சினைகளை எடுத்துக்காட்டுவதாக இருந்தாலும், பல காணொளிகள் உண்மைக்கு புறம்பான தகவல்களைக் கொண்டிருப்பதும், மருத்துவர்கள் மீது தவறான பார்வையை ஏற்படுத்துவதும் கவலையளிக்கும் விடயமாகும்.
குறிப்பாக, மட்டக்களப்பு – கரடியனாறு(Karadiyanaru)அரச வைத்தியசாலையில் குழந்தையின் இறப்பு பற்றி தந்தை பதிவிட்ட காணொளி சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளியில் கூறப்பட்டுள்ள விடயங்கள் உண்மையா என்பது குறித்து நோக்குவது அவசியம்.
கரடியனாறு வைத்தியசாலையில் 6 மாத குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குழந்தையின் குடும்பத்தினர்
குழந்தையின் குடும்பத்தினர், வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்தே குழந்தையின் மரணத்திற்கு காரணம் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால், வைத்தியசாலை நிர்வாகம் வேறு காரணங்களை முன்வைக்கிறது.
அவர்களின் கூற்றுப்படி,
சம்பவத்தன்று பிற்பகல், குழந்தை கடுமையான காய்ச்சலுடன் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டது. கடமையில் இருந்த வைத்தியர், குழந்தையை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றி கண்காணிப்பில் வைத்திருந்து சிகிகச்சையளிக்க பரிந்துரைத்தார்.
ஆனால், பெற்றோர் தைப்பொங்கல் பண்டிகை காரணமாக இதற்கு மறுப்பு தெரிவித்து, குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் இரவு வேளை குழந்தையின் உயிர் பிரிந்த பின்னரே வைத்தியசாலைக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது.
அதேவேளை காச்சலானது குழந்தைக்கு சிலநாட்களாக இருந்தாகவும் சம்பவ தினத்திற்கு முன்தினம் ஏறாவூர் மற்றும் ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த தகவலையும் பெற்றோர் தெரிவித்திருந்தனர்.
அந்த நாளில், குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் இருந்ததால் தாய்ப்பால் குடிக்க மறுத்தது. எனவே, குடும்பத்தினர் குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்தனர்.
குழந்தை மீண்டும் மருத்துவமனைக்கு
ஆனால், பால் குடித்த பிறகு குழந்தை மூச்சுவிடுவதில் சிரமம் அடைந்தது. இந்த நிலையில்,
குழந்தையின் அம்மா அல்லது அப்பா அல்லாமல், அயலில் வசிக்கும் ஒரு பெண்மணி குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தார்.எனவும் குழந்தையை மருத்துவமனையில் அனுமதிப்பது குறித்து குழந்தையின் பெற்றோர்கள் இருவரும் ஒரே கருத்தில் இல்லை என்பது கிராம மக்களிடம் இருந்து தெரியவந்துள்ளது.
இதனால், குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கக்கூடிய சந்தர்பங்களும் இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், குழந்தையின் மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
குழந்தையின் உடற்கூற்று அறிக்கை மிகமுக்கியமானது, அவ் அறிக்கை மற்றும் குடும்பத்தினரின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு, விரிவான விசாணைகள் மேற்கொள்ளப்டும் எனவும் குற்றமிழைக்கப்பட்டிருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பகுதியான கரடியனாறில், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் காட்டுயானைத் தாக்குதல்கள் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு, வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறை இருந்தபோதிலும், இந்த வைத்தியசாலை தனது சேவையைத் தொடர்ந்து அர்பணிப்புடன் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பிரதேச வைத்தியசாலையாக காணப்படும் இவ்வைத்திசாலையினை, இந்தப் பிரதேசத்தின் முழுமையான சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், ஒரு ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படுவதற்கான இதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் இவ்வாறான சர்ச்கைகள் வைத்தியதுறை தொடர்பில் கேள்விகளை தோற்றுவிக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு,
17 January, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.
<!–
இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,
–>