Home இலங்கை பொருளாதாரம் இலங்கைக்கு கிடைக்கவுள்ள சீனாவின் 1.5 பில்லியன் டொலர் கடன்

இலங்கைக்கு கிடைக்கவுள்ள சீனாவின் 1.5 பில்லியன் டொலர் கடன்

0

Courtesy: Sivaa Mayuri

கடன் நெருக்கடியின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திட்டங்களுக்காக சீனாவின் (China) ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியிடமிருந்து (Exim)1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான கடன்களை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் இலங்கை இந்த வாரம் ஒப்பந்தம் செய்து கொண்டது.

அத்துடன், பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து தலைமை தாங்கிய பாரிஸ் கிளப் தலைமையிலான உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனும் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி புனரமைப்பு

இதனையடுத்தே சீனாவின் இந்த கடன் வசதி இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.

இந்தநிலையில், மூன்று வருடங்களுக்கும் மேலாக தாமதமாகிவரும் கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்கான நிதியும் கிடைக்கக்கூடிய கடன்களில் அடங்கும் என்று திறைசேரி தெரிவித்துள்ளது.

அத்துடன், கிடப்பில் போடப்பட்டுள்ள வேறு சில வீதிப்புனரமைப்புத் திட்டப் பணிகளும் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்படவுள்ளன.  

NO COMMENTS

Exit mobile version