Home உலகம் பாண்டா பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள சீனா

பாண்டா பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள சீனா

0

ஆஸ்திரியாவின் (Austria) உயிரியல் பூங்காவுடன் மாபெரும் பாண்டா பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக சீனா (China) வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் (Mao Ning) நேற்று (27) இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சீன மக்களுக்கும் வெளிநாட்டு மக்களுக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுவடையும் என சீனா கூறுகிறது.

பாதுகாப்பு ஒத்துழைப்பு 

“யுஞ்சுவான்” மற்றும் “சின்பாவோ” ஆகிய இரண்டு ராட்சத பாண்டாக்களை அமெரிக்காவின் (United States) சான் டியாகோ (San Diego) உயிரியல் பூங்காவில் ஒப்படைத்ததன் மூலம் சீன-அமெரிக்க பாண்டா பாதுகாப்பு ஒத்துழைப்பு மீண்டும் தொடங்கியது என்று சீனா (China) வனவிலங்கு பாதுகாப்பு  சங்கம் கூறுகிறது.

குறித்த மிருககாட்சி சாலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, உயிரியல் பூங்காக்களுடன் பாண்டா பாதுகாப்பு ஒத்துழைப்பை சீனா பராமரித்து வருகிறது. சீன-ஆஸ்திரிய மற்றும் சீன-அமெரிக்க ராட்சத பாண்டாக்களின் பாதுகாப்பு விலங்குகளின் இருப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

உலகளாவிய பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கும் சீன மக்களின் சர்வதேச நட்பை வலுப்படுத்துவதற்கும் இந்த பாண்டா பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கியமானதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version