இலங்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக சீனாவின் அகில சீன மகளிர் கூட்டமைப்பு (ACWF) 1,000,000 RMB (சுமார் ரூ.43 மில்லியன்) மதிப்புள்ள பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
தாய்-சேய் அறைக்கான உபகரணங்கள், நாடாளுமன்ற ஊழியர்களுக்கான குழந்தை பராமரிப்பு மையம் மற்றும் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் குழு மூலம் விநியோகிக்கப்படும் பெண்கள் சுகாதாரப் பொருட்கள் ஆகியவை இந்த நன்கொடையில் அடங்கும்.
நாடாளுமன்றில் வைத்து உதவிப்பொருட்கள் கையளிப்பு
நேற்று (25) நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மருத்துவர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ஆகியோர் சீனத் தூதர் குய் ஜென்ஹோங்கிடமிருந்து இந்த பொருட்களைப் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை-சீன நீண்டகால நட்புறவையும், பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் நலனுக்கான சீனாவின் தொடர்ச்சியான ஆதரவையும் அவர்கள் இதன்போது எடுத்துரைத்தனர்.
பாடசாலை சீருடைகள் மற்றும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் எதிர்கால முயற்சிகளுக்கு சீனா உதவி செய்வதாக உறுதியளித்த நிலையில் இந்த நன்கொடை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
