Home இலங்கை குற்றம் கொழும்பில் ஹோட்டலுக்குள் சடலம் மீட்பு

கொழும்பில் ஹோட்டலுக்குள் சடலம் மீட்பு

0

கொழும்பில் சொகுசு ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொம்பனிவீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் சீனப் பிரஜையின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

உடலில் இரத்த கசிவுகள் காணப்பட்டுள்ள நிலையில், மரணத்தில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version