Home இலங்கை அரசியல் அரசாங்கத்துக்கு அர்ச்சுனா பகிரங்க எச்சரிக்கை

அரசாங்கத்துக்கு அர்ச்சுனா பகிரங்க எச்சரிக்கை

0

பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்கினால் நாட்டிற்கு பில்லியன் கணக்கான முதலீடுகளை நாம் கொண்டு வருவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(24.02.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“மொத்த மூலதனச் செலவில் வடக்கு கிழக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி 0.1 வீதம் மட்டுமே ஆகும். இது அநுர அரசாங்கம் தமிழர்களுக்கு போட்ட பிச்சை.

45,000 தமிழர்களை கொன்றுவிட்டு இதுவே எங்களுக்கு போடும் பிச்சை.

ஏமாற்றம்

இதேவேளை, சுகாதாரத் துறையில் வடக்கிற்கு 0.6 வீதமும் கிழக்கிற்கு 0.8 வீதமும் ஒதுக்கி உள்ளீர்கள்.

முடிந்தால் பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குங்கள். பில்லியன் கணக்கான பணத்தை நாம் நாட்டிற்குள் கொண்டு வருகின்றோம்.

நான் இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு வைத்திருந்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது” எனத் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version