Home இலங்கை குற்றம் தலதா மாளிகை வளாகத்தில் வெளிநாட்டவரின் விதிமீறல்..! பொலிஸார் நடவடிக்கை

தலதா மாளிகை வளாகத்தில் வெளிநாட்டவரின் விதிமீறல்..! பொலிஸார் நடவடிக்கை

0

தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோன் கமராவை பறக்க விட்டதாகக் கூறப்படும் சீன நாட்டவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தியவதன நிலமே குடியிருப்புக்கு அருகிலுள்ள உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து ட்ரோன் கமராவை அவர் இயக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சீன நாட்டவர், ட்ரோன் கமராவையும் அதைப் பறக்கவிடப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

மேலதிக விசாரணைகள்

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version