Home முக்கியச் செய்திகள் நாட்டில் மற்றுமொரு பேருந்து விபத்து: பலர் படுகாயம்

நாட்டில் மற்றுமொரு பேருந்து விபத்து: பலர் படுகாயம்

0

ஹொரனை – இரத்தினபுரி (Ratnapura) வீதியில் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று (16) இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து ஹொரனை – இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தனியார் நிறுவனம்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த பேருந்து லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

காவல்துறையினர் விசாரணை

விபத்தில் காயமடைந்தவர்கள் இடங்கொட மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிரியெல்ல காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version