Home தொழில்நுட்பம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய சீன சாங்இ 6 விண்கலம்

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய சீன சாங்இ 6 விண்கலம்

0

நிலவின் மேற்பரப்புகளில் உள்ள மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து வருவதற்காக அனுப்பப்பட்ட சீனாவின்(China) சாங்இ 6 (
Chang’e 6)விண்கலம், நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலவில் அமெரிக்கா(Us), சீனா(China), ஜப்பான்(Japan), இந்தியா(India) உள்ளிட்ட நாடுகள் தங்கள் விண்கலங்களை தரையிறக்கி ஆராய்ச்சிகளை முன்னெடுத்துவருகின்றன.

அந்த வகையில், சீனாவின் சாங்இ விண்கலம் ஐந்து முறை நிலவில் தரையிறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

சாங்இ 5 விண்கலம்

கடந்த 2020ஆம் அனுப்பப்பட்ட சாங்இ 5 (
Chang’e 5) விண்கலம், நிலவில் தரையிறங்கி மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்து வந்ததுள்ளது.

இந்த முறை, நிலவின் தென்துருவத்தில் உள்ள கல் மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து வர, சாங்இ 6 விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த விண்கலம் சீன நேரப்படி, நேற்று முன்தினம்(02) அதிகாலை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியதாக அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

விண்கலத்தில் தரையிறங்கிய லேண்டர் கருவி, தென்துருவத்தின் மேற்பரப்பு மற்றும் நிலவின் அடிப்பகுதியில் இருந்து, 2 கிலோ அளவுக்கு மண் மற்றும் கற்கள் மாதிரிகளை சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த மாதிரிகளை எடுத்துக் கொண்டு சாங்இ 6 விண்கலம் வரும் 25 ஆம் திகதி பூமிக்கு திரும்பவுள்ளதாக சீனா குறிப்பிட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, 2030ஆம் ஆண்டில் நிலவில் மனிதர்களை தரையிறங்கச் செய்யும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version