Home ஏனையவை வாழ்க்கைமுறை சீரற்ற காலநிலையால் பரவக்கூடிய நோய்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சீரற்ற காலநிலையால் பரவக்கூடிய நோய்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகச் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா (Deepal Perera) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதன் காரணமாக வயிற்றுப்போக்கு, தடுமல், வைரஸ் காய்ச்சல்கள் உள்ளிட்ட நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுகிறது.

இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள்: தற்போதைய நிலையில் பாரதிய ஜனதாக்கட்சி முன்னிலை

காய்ச்சல் பரவக்கூடிய அபாயம்

இந்த நோய்களானது அசுத்தமான நீர் மற்றும் உணவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் இலகுவாகப் பரவக்கூடும். காய்ச்சல், வாந்திபேதி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் மலத்துடன் இரத்தம் கசிதல் உள்ளிட்டவை இந்நோய்களுக்கான அறிகுறிகளாகும்.

இந்நிலையில், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் காய்ச்சல் விரைவாகப் பரவினால் அது வைரஸ் காய்ச்சலாகவும் இருக்கலாம்.

குளிர் காலம் காரணமாகக் குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் ஆபத்து – மக்களுக்கு எச்சரிக்கை

லிட்ரோ எரிவாயுவின் விலைகள் குறைப்பு – புதிய விலை அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version