Home இலங்கை அரசியல் மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த சீன வர்த்தகர்கள் குழு

மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த சீன வர்த்தகர்கள் குழு

0

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தங்காலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (16) சீன தேயிலை வர்த்தகர்கள் குழு சந்தித்து பரிசுகளை வழங்கி அவரது நலனை விசாரித்தது.

 கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து மகிந்த ராஜபக்ச தங்காலை கார்லடன் இல்லத்திற்கு சென்ற பின்னர் சீன வர்த்தகர்கள் மேற்கொண்ட முதல் வருகை இதுவாகும்.

வெலிகம மற்றும் நுவரெலியாவுக்கும் தமது விஜயம்

இந்த குழு வெலிகம மற்றும் நுவரெலியாவுக்கும் தமது விஜயத்தை மேற்கொண்டது.

முன்னதாக கொழும்பிலுள்ள சீன தூதுவரும் மகிந்தவை சென்று சந்தித்திருந்தார்.

இதேவேளை தங்காலைக்கு சென்றுள்ள மகிந்த ராஜபக்சவை பல்வேறு தரப்பினரும் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version