1098 உருவப் படங்களை அடையாளம் காட்டி அவற்றின் பெயர்களை மனப்பாடமாகக் கூறி 3 வயது குழந்தை சோழன் உலக சாதனைப் படைத்துள்ளது.
வத்தளை ஹுனுபிட்டிப் பகுதியைச் சேர்ந்த ஷம்லான் என்ற குழந்தையே இந்த சாதனையைப் படைத்துள்ளது.
தங்கப்பதக்கம் மற்றும் அடையாள அட்டை
உலகில் 3 வயதில் அதிக ஞாபகத் திறன் கொண்ட குழந்தை என்ற பெயரை ஷம்லான் பெற்றுள்ளார்.
இதற்கமைய சோழன் உலக சாதனைப் படைத்த குழந்தை ஷம்லானுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம் மற்றும் அடையாள அட்டை போன்றவை அண்மையில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Source: https://tamilwin.com/article/cholan-is-a-3-year-old-child-holds-world-record-1719671093
