Home இலங்கை அரசியல் வடக்கு – தெற்கு வேறுபாடு இல்லாமல் ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும்! ரோகன ஹெட்டியாராச்சி

வடக்கு – தெற்கு வேறுபாடு இல்லாமல் ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும்! ரோகன ஹெட்டியாராச்சி

0

வடக்கு தெற்கு என வேறுபாடு இல்லாமல் மிக பொருத்தமான ஜனாதிபதியை தெரிவு செய்யவேண்டுமென பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி (Rogana Hettiarachi) தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்க்காணலிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“லஞ்சம் ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்பகூடிய தலைவர் யார் என பார்த்த மக்கள் ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும்.

ஐந்து ஒருடம் அவருக்கான பதவி காலம் வழங்கப்படுகின்றன அவருடைய நோக்கம் சிறப்பாக இல்லை என்றால் நாங்கள் உட்பட நமது எதிர்கால பரம்பரைகளின் எதிர்காலம் இருளில் மூழ்ககூடிய நிலை காணப்படுகின்றன.

எனவே இதனை நன்கு அலசி ஆராய்ந்துதான் நமது வாக்கை செலுத்தவேண்டும்.

தேர்தல் முடிவடைந்த பின்னர் ஏற்படும் நிலை குறித்து நாம் அவதானத்துடன் செயற்படவேண்டிய தேவை காணப்படுகின்றது.

யாரு வென்றாலும் அந்த வெற்றியை கொண்டாடும் உரிமை அவர்களிடையே உள்ளது.

தோல்வி உற்றவர்கள் அல்லது ஏனையவர்களுக்கு 104 பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டாட வேண்டும்” என்றார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்…!


https://www.youtube.com/embed/DTwMPVronP0

NO COMMENTS

Exit mobile version