Home இலங்கை சமூகம் பண்டிகை காலம் குறித்து பொதுமக்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!

பண்டிகை காலம் குறித்து பொதுமக்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை!

0

எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு பொது இடங்களில் மக்கள் தமது உடமைகள் குறித்த அவதானமாக இருக்குமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான புத்திக மனதுங்க அறிவுறுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் கூறியுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை காவல்துறை தயாரித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை

அதன்படி, மேல் மாகாணத்தில் மாத்திரம் 6 ஆயிரத்து 500 காவல்துறை உத்தியோகத்தர்கள் இதற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கடைகளில் திருடர்கள் மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காண 500க்கும் மேற்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்களை சிவில் உடையில் கண்காணிப்பில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். 

அத்துடன், கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட மத ஸ்தலங்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும், உங்களைச் சுற்றியுள்ள அந்நியர்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்களைப் பற்றி அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது காவல்துறை அதிகாரிகளுக்கோ தெரிவியுங்கள்.” என காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version