விடுதலை 2
விடுதலை, கடந்த ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படங்களில் ஒன்று.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி என பலர் நடிக்க வெளியான இப்படத்தின் 2ம் பாகம் இன்று மாஸாக வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் கனிமவளம் திருடும் அரசுக்கு எதிராக விஜய் சேதுபதி மலைவாழ் மக்களை ஒன்று திரட்டி இயக்கத்தை அமைத்து செயல்பட்டு வருகிறார். அந்த மக்களை ஒடுக்க போலீஸ் உதவியோடு அரசு முயற்சி செய்ய அந்த குழுவில் சூரி இருக்கிறார்.
எதிர்நீச்சல் 2 சீரியலில் நான் இல்லையா, நடிகையே போட்ட பதிவு… யார் பாருங்க, என்ன விஷயம்
காவல்துறையில் பணிபுரியும் சூரி அந்த மக்களுக்கு ஆதரவாக செயல்பட அவர் பல சங்கடத்தை சந்திக்கிறார். சூரி பெருமாள் வாத்தியாரை பிடித்து கொடுக்கிறாரா, பெருமாள் வாத்தியார் யார் என்பது இந்த 2ம் பாகம் பேசப்பட இருக்கிறது.
முதல் நாள்
இன்று காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் திரையிடப்பட்டன. படத்தின் டிக்கெட் புக்கிங் மதியம் ஒரு மணி நிலவரப்படி ரூ. 2.58 கோடி விற்பனையாகியுள்ளதாம்.
இதனால் முதல் நாள் வசூல் ரூ. 3 கோடியைத் தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.