Home ஏனையவை ஆன்மீகம் நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை

நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை

0

மட்டக்களப்பு குருக்கள்மடம் தேவாலயம்

மட்டக்களப்பு குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தில் நத்தார்
நள்ளிரவு விசேட ஆராதனை இடம்பெற்றுள்ளது.

யேசு பாலன் பிறந்த தினமாக கொள்ளப்படும் டிசம்பர் 25 நத்தார் விசேட நள்ளிரவு
ஆராதனை இன்றையதினம்(25.12.2024) நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வுகள் ஆலய அருட்தந்தை ஹர்சதன் ரிச்சட்ஸன் தலைமையில் இடம்பெற்றதுடன், திருப்பலியும் ஒப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

செய்தி – ருசாத்

மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதா திருத்தலம்

நத்தார் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதா திருத்தலத்தில் நத்தார் நள்ளிரவு விசேட
ஆராதனை இடம்பெற்றுள்ளன.

இந் நிகழ்வுகள் ஆலய அருட்தந்தை தேவதாஸ்ன் அடிகளார்

தலைமையில் இடம்பெற்றதுடன், திருப்பலியும் ஒப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

செய்தி – ருசாத்

மட்டக்களப்பு  புனித மரியால் பேராலயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் வழிபாடுகள் மாவட்டத்தின் முதல்
பேராலயமான புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் பலத்த பாதுகாப்பிற்கு
மத்தியில் கிறிஸ்மஸ் சிறப்பாக நடைபெற்றுள்ளன.

புனித மரியாள் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அடிகளின்
பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான பேராயர் கலாநிதி
அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இதன்போது விசேட ஆராதனைகள் நடைபெற்றுள்ளன.

இதன்போது இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு கொட்டில்
திறக்கப்பட்டு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டுள்ளது.

செய்தி – குமார்

பரந்தன் புனித அந்தோனியார் ஆலயம்

கிளிநொச்சி பரந்தன் புனித அந்தோனியார் ஆலயத்தின் நத்தார் தின திருப்பலி
ஒப்புக் கொடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

குறித்த ஆயத்தில் பூசை
வழிபாடுகள். விசேட பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்றுள்ளது.

செய்தி – யது

NO COMMENTS

Exit mobile version