Home இலங்கை குற்றம் சீ.ஐ.டி என்ற போர்வையில் இலஞ்சம் கோரிய 4 பேர் கைது

சீ.ஐ.டி என்ற போர்வையில் இலஞ்சம் கோரிய 4 பேர் கைது

0

குற்ற விசாரணைப் பிரிவினர் என்ற போர்வையில் வீடொன்றுக்குள் நுழைந்து இலஞ்சம் கோரிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பிரசேதத்தில் குறித்த நபர்கள் இவ்வாறு இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, நபர் ஒருவரிடம் பத்து மில்லியன் ரூபா லஞ்சம் கோரியதாக குறித்த நான்கு பேர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ட்யூப் லைட்டை விழுங்கிய தும்பறை சிறைக்கைதி : வைத்தியசாலையில் அனுமதி

நான்கு பேரும் கைது

இந்நிலையில்,தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் முறைப்பாட்டுக்கமைய இந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வீடொன்றில் சந்தேக நபர்கள் நுழைந்து குற்ற விசாரணைப் பிரிவினர் போல் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

இதன்போது, முறைப்பாடு செய்தவருக்கு எதிராக விசாரணை இருப்பதாகக் கூறி முறைப்பாட்டாளரிடம் இருந்த 12 மில்லியன் பணமும் 3,500 அமெரிக்க டொலர்களும் சந்தேகநபர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இகன் பின்னர், சந்தேகநபர்கள் வீட்டுக்குச் சென்று அங்கு பணிபுரியும் இந்தியர் ஒருவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, சந்தேகநபர்கள் முறைப்பாட்டாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு எதிரான வழக்கிற்கு உதவவும், பறிமுதல் செய்யப்பட்ட கடவுச்சீட்டை  திருப்பித் தரவும் 40 மில்லியன் ரூபா பணம் இலஞ்சமாக கேட்டுள்ளனர்.

இதையடுத்து, அந்தத் தொகையிலிருந்து 10 மில்லியன் ரூபாவை கழித்து 35 மில்லியன் ரூபா தருமாறு கேட்டுள்ளனர். 

இந்நிலையிலேயே, குறித்த சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய கைது செய்யப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். 

பயனாளிகளின் கணக்குகளில் 115 பில்லியன் ரூபா: மகிழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்

கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version