முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது அவதூறு சுமத்தப்படுவதற்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி இந்த முறைப்பாட்டை இன்று(06.09.2025) முன்வைத்துள்ளார்.
மித்தெனிய, தலாவ பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் இராசயன விவகாரம் தொடர்பில் முன்னாள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியின் சகோதரர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவதூறு குற்றச்சாட்டுக்கள்
தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னரே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதனால், மகிந்த ராஜபக்ச மீது அவதூறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக கூறியே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகிந்த ராஜபக்ச, இலங்கையின் மிகப்பெரும் குற்றவாளியோடு மோதியதாகவும் அவர் மீது அவதூறு குற்றச்சாட்டுக்களை சுமத்துவதை நிறுத்துமாறும் பசன் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
