Home இலங்கை அரசியல் ஜனாதிபதியை ஒரு பெண்ணுடன் இணைத்து வந்த செய்தி: சிஐடியில் முறைப்பாடு

ஜனாதிபதியை ஒரு பெண்ணுடன் இணைத்து வந்த செய்தி: சிஐடியில் முறைப்பாடு

0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ஒரு பெண்ணுடன் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அகலங்க உக்வத்தே, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

குறித்த பதிவு, ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க கூடிய உள்ளடக்கத்தை கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஆதாரமற்ற பதிவுகள்

அத்துடன், குறித்த பதிவுகளை இட்ட முகப்புத்தக கணக்குகளின் உரிமையாளர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முற்றிலும் ஆதாரமற்ற இந்த பதிவுகள் சமூகத்தை தவறான வழியில் வழிநடத்தக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version