Home இலங்கை அரசியல் முன்னாள் பொலிஸ் மா அதிபரை கைது செய்ய புலனாய்வு பிரிவு கடமையில்..!

முன்னாள் பொலிஸ் மா அதிபரை கைது செய்ய புலனாய்வு பிரிவு கடமையில்..!

0

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கு புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayathissa) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தேசபந்து தென்னகோன் கைது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

சுற்றி வளைப்பு

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசபந்து தென்னகோனை கைது செய்யும் நோக்கில் சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரையில் அவரை கைது செய்ய முடியவில்லை.

தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னகோனை கைது செய்யும் நோக்கில் புலனாய்வுப் பிரிவினர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர் என நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

வெலிகம ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version