Home முக்கியச் செய்திகள் தேசபந்து தென்னகோன் விவகாரம் : சிஐடியின் அதிரடி நடவடிக்கை

தேசபந்து தென்னகோன் விவகாரம் : சிஐடியின் அதிரடி நடவடிக்கை

0

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) தேடுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நான்கு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசபந்துவை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையாலேயே குற்றப்புலனாய்வு திணைக்களம் இவ்வாறு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது.

இந்தநிலையில் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக இதுவரை அமைக்கப்பட்டுள்ள காவல்துறை குழுக்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விசாரணைகளை ஆரம்பம்

அத்துடன் இந்த நான்கு குழுக்கள் நேற்று (17) முதல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு மேலதிகமாக குறித்த குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

வெலிகம – பெலென பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள்  காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/XH0TveCN_ic

NO COMMENTS

Exit mobile version