Home இலங்கை அரசியல் ரணில் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை

ரணில் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை

0

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (24) குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

இந்த விசாரணை பொது சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுவதாகவும், அதற்கான விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணச் செலவுகள் மற்றும் அவை அரச நிதியை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை மையமாகக் கொண்டு இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version