Home இலங்கை சமூகம் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சி.ஐ.டி அதிகாரியின் உடல்! பொலிஸார் தீவிர விசாரணை

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சி.ஐ.டி அதிகாரியின் உடல்! பொலிஸார் தீவிர விசாரணை

0

நீர்கொழும்பு, கொச்சிக்கடை, கம்மல் தோட்டுபொல கடற்கரையில் முச்சக்கர வண்டிக்குள் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றிய 56 வயதுடைய ஜயந்த புஷ்பகுமார என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நீதவான் விசாரணை

இந்நிலையில் எரிந்த நிலையில் காணப்பட்ட முச்சக்கரவண்டியை கவனித்த மக்கள் பின்னர், இன்று காலை கொச்சிக்கடை பொலிஸாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, பொலிஸாரும் நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் சம்பவ இடத்துக்கு விரைந்ததுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

மேலும் நீதவான் விசாரணைக்குப் பிறகு சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதைாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version