Home முக்கியச் செய்திகள் யாழில் வன்முறை கும்பலின் வெறியாட்டம் – கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன்

யாழில் வன்முறை கும்பலின் வெறியாட்டம் – கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன்

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொடூர சம்பவம் நேற்றைய தினம் (13.06.2025) வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளர்.

இருபாலை – மடத்தடி பகுதியை சேர்ந்த சந்திரன் துஷ்யந்தன் எனும் இளைஞனே வெட்டி
படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சில மணி நேரத்தில் கைது 

சம்பவம் தொடர்பில் அறிந்த கோப்பாய் காவல்துறையினர் துரித விசாரணைகளை முன்னெடுத்து
வாள் வெட்டு தாக்குதல் நடாத்திய சந்தேகத்தில் இருவரை ஒரு சில மணி நேரத்தில்
கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.youtube.com/embed/Sn1CIz9BbYU

NO COMMENTS

Exit mobile version