Home இலங்கை அரசியல் கதிர்காமம் விகாராதிபதியை 7 மணி நேரம் விசாரணை செய்த சி.ஐ.டி.

கதிர்காமம் விகாராதிபதியை 7 மணி நேரம் விசாரணை செய்த சி.ஐ.டி.

0

கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கதிர்காமத்தில் கட்டப்பட்டுள்ள வீடு ஒன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த
ராஜபக்சவுக்குச்(Mahinda Rajapaksa) சொந்தமானது எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம்
வழங்குவதற்காகக் கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்
இன்று செவ்வாய்க்கிழமை முன்னிலையாகியிருந்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

இதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கதிர்காமம் கிரிவெஹெர
விகாராதிபதி கொபவக்க தம்மிந்த தேரரிடம் இருந்து 7 மணிநேரம் வாக்குமூலம் பதிவு
செய்துள்ளனர்.

வாக்குமூலம் வழங்கிய பின்னர் கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதி கொபவக்க
தம்மிந்த தேரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கதிர்காமம்
ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர நேற்று திங்கட்கிழமை குற்றப்
புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version