Home இலங்கை அரசியல் கலாநிதி பட்டம் குறித்து மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்த சி.ஐ.டி

கலாநிதி பட்டம் குறித்து மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்த சி.ஐ.டி

0

நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் (Harshana Nanayakkara) பெயருக்கு முன்னால் கலாநிதி என்று எழுதப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம், நாடாளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நேற்று (20) நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்து நாடாளுமன்றத்தின் உதவி செயலாளர் நாயகம் உட்பட மூன்று அதிகாரிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

தான் பெற்றிராத ‘கலாநிதி’ பட்டத்தை நாடாளுமன்ற இணையத்தளத்தில் தனது பெயருக்கு முன்னால் தவறாக குறிப்பிட்டமை தொடர்பில் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதன்படி, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நாடாளுமன்ற அதிகாரிகள் குழுவிடம் நேற்று வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version