Home இலங்கை அரசியல் கபில் சந்திரசேனவை தேடும் குற்றப்புலனாய்வுத்துறையினர்

கபில் சந்திரசேனவை தேடும் குற்றப்புலனாய்வுத்துறையினர்

0

 வெளிநாட்டில் வசிப்பதாக கூறப்படும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்க்கு ஒரு காலத்தில்
தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த கபில சந்திரசேனவை குற்றப்புலனாய்வினர் தேடி
வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்பஸ் கொள்வனவுக்காக அவர் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து இரண்டு மில்லியன்
அமெரிக்க டொலர்களை லஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டு
முன்வைக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத்துறையினர்

இது ஒரு லஞ்ச வழக்கில் மிக அதிக தொகை என்றும் கூறப்படுகிறது
எனினும் அவர் தொடர்பில் உரிய செயற்பாடுகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

இதற்கிடையில் தேடப்படுவதாக கூறப்படும் சந்திரசேன இரண்டு வாரங்களுக்கு முன்னர்
கொழும்பில் உள்ள கொல்ப் கழகம் ஒன்றில் கொல்ப் விளையாடினார் என்னும் மது
அருந்தி மகிழ்ந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் அவரை தாம் தேடி வருவதாக இன்னும் குற்றப்புலனாய்வுத்துறையினர்,
விமான நிலைய குடிவரவு அதிகாரிகளுக்கு அறிவிக்கவில்லை என்று கொழும்பின் ஊடகம்
ஒன்று தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version