Home இலங்கை அரசியல் சிஐடியிடம் இருந்து கருணாவுக்கு பலமுறை சென்ற அழைப்பு : பயமில்லை என பகிரங்க அறிவிப்பு

சிஐடியிடம் இருந்து கருணாவுக்கு பலமுறை சென்ற அழைப்பு : பயமில்லை என பகிரங்க அறிவிப்பு

0

என்னை பலமுறை சிஐடியில் விசாரணைக்கு அழைத்திருக்கின்றார்கள், நான்காம் மாடி வரை சென்று வந்திருக்கின்றேன் ஆனால் நான் ஒரு தடவைக் கூட பயந்ததில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (Karuna Amman) தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் (Batticaloa) இன்றையதினம் (09.06.2025) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், யுத்தம் நடந்த காலத்தில் யுத்தத்தை விமர்சித்தவர்கள் அல்லது யுத்ததில் இருந்து தப்பி ஓடியவர்கள் தற்போது தேசியவாதிகளாக மாற்றமடைந்துள்ளார்கள்.

வடமாகாணத்தில் ஆட்சி அமைப்பதற்காக எதிரும் புதிருமாக இருந்த கஜேந்திர குமாரை தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தித்தது அவ்வாறே டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசு கட்சி பதில் தலைவர் சிவஞானம் சந்தித்துள்ளார் அதற்கு பல விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் சிவஞானம் துணிந்து சென்று டக்கிளசுடன் பேசி ஆட்சி அமைப்பதற்கான முயற்சியை வரவேற்கின்றோம்.

இது போன்று எதிர்காலத்தில் நாங்கள் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படவேண்டும் என்பது தான் எங்களது வேண்டுகோள் என தெரிவித்துள்ளார். 

மதுபானம் கொடுத்து வாக்குகளைப் பெற்ற தமிழ்க் கட்சி தமிழ்த் தேசியவாதிகளாம். நாங்கள் எல்லாம் துரோகிகளாம். பொறுத்துக் கொள்ள முடியாத அந்த சமூகம் தான் இன்று எம்மை துரோகிகளாக அடையாளப்படுத்துகிறது.

என்னை பலமுறை சிஐடியில் விசாரணைக்கு அழைத்திருக்கின்றார்கள். நான்காம் மாடி வரை சென்று வந்திருக்கின்றேன். ஆனால் நான் ஒரு தடவைக் கூட பயந்ததில்லை, பயமுமில்லை என தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள காணொளியில் காண்க…

https://www.youtube.com/embed/6O89ogbLH8Y

NO COMMENTS

Exit mobile version