Home முக்கியச் செய்திகள் இந்தோனேசியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட குற்றவாளிகளை பொறுப்பெடுத்தது சிஐடி

இந்தோனேசியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட குற்றவாளிகளை பொறுப்பெடுத்தது சிஐடி

0

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் பாணந்துறை நிலங்கா ஆகியோர் மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான பாக்கோ சமன் மற்றும் தம்பரி லஹிரு ஆகியோரும் மேலதிக விசாரணைக்காக மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவால் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில்அழைத்து வரப்பட்டனர் 

 இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்களும் நேற்று (30) மாலை 07.30 மணியளவில் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன் காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version